ஜேர்மனியில் பறந்து வீட்டின் கூரையில் சொருகிய கார்! என்ன நடந்தது?
ஜேர்மனியில் கார் ஒன்று வீட்டின் கூரையில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
10 அடி உயரத்திற்கு பறந்து
வடமேற்கு ஜேர்மனியின் போஹ்மேட் நகரில் கார் ஒன்று புயல்வேகத்தில் பயணித்தது.
சீரற்ற நிலையில் சென்ற கார், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதியதில் 10 அடி உயரத்திற்கு பறந்து, அங்குள்ள வீட்டின் கூரை மீது சொருகியது.
இந்த விபத்தில் கார் இடித்ததில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார். மேலும் அடையாளம் தெரியாத 42 வயது நபரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறார்கள்
அத்துடன் காரின் உள்ளே இருந்த 11, 12 மற்றும் 13 வயது சிறார்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அவசரகால சேவைகளில் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு ஹெலிகொப்டர்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
காரை ஒரு கிரேன் மூலம் கூரையில் இருந்து அகற்றி, பொலிசார் அதனை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |