நீடா அம்பானி வைத்திருக்கும் காரானது முகேஷ் அம்பானி காரின் விலையை விட அதிகம்
உலகிலேயே குறைவான எண்னிக்கை கொண்ட கார்களில் ஒன்றை நீடா அம்பானி வைத்திருக்கிறார்.
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீடா அம்பானியும் அவர்கள் செய்யும் செயலுக்காக தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பார்கள்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீடா அம்பானி இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது அவரது கணவரான அம்பானியின் காரின் விலையை விட அதிகமாம்.
நீடா அம்பானியின் கார்கள்
நீடா அம்பானியின் ரூ.100 கோடி மதிப்புள்ள Audi A9 Chameleon காரானது அதன் தனித்துவமான தன்மையினாலும், சிறப்பு பண்புகளாலும் அதிகம் பேசப்படுகிறது. இவரது குடும்பத்திற்கு சொந்தமாக பல உயர் ரக கார்கள் இருந்தாலும் இந்த கார் தனியாக தெரிகிறது.
ஏனென்றால் இந்த கார் நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பொத்தானைக் அழுத்துவதன் மூலம் நிறத்தை மாற்ற முடியும்.
இது போன்ற வாகனங்கள் உலகிலேயே 11 தான் உள்ளன. மேலும் இதன் வண்ணப்பூச்சு வேலை (paint job) மின்சாரம் மூலம் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டது.
Audi A9 Chameleon காரில் 4.0-liter V8 engine இருப்பதால் 600 horsepower உற்பத்தி செய்கிறது. இந்த வாகனமானது மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், மூன்றரை வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
இந்த காரை தவிர நீடா அம்பானி வைத்திருக்கும் கார்களில், Rolls-Royce Phantom VIII EWB, Mercedes-Maybach S600 Guard, Ferrari 812 Superfast, Bentley Continental Flying Spur, Rolls-Royce Cullinan, BMW 7 Series 760Li Security ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |