பிரித்தானியாவில் 5 சிறுவர்களுடன் ஆற்றில் பாய்ந்த கார்: சிறுமியின் உடல் மீட்பு
பிரித்தானியாவில் ஆற்றில் கார் பாய்ந்த சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆற்றில் பாய்ந்த கார்
பிரித்தானியாவில் விஸ்பெக் செயின்ட் மேரிஸ்(Wisbech St Mary’s) சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்தது.
இந்த விபத்தின் போது 3 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்கள் என 5 பேர் காரில் பயணித்த நிலையில், அதில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நார்த் பிரிங்க் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை விட்டு விலகி நீன் ஆற்றில்(nene River) பாய்ந்தது.
உடலை மீட்ட மீட்புக்குழுவினர்
சம்பவத்தை தொடர்ந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள் புதன்கிழமை மதியம் சிறப்பு முழ்காளர் குழுவினரின் உதவியுடன் சிறுமி ஒருவரின் உடலை ஆற்றில் இருந்து மீட்டனர்.
இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர் காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர். மற்றொரு சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து தொடர்பான விசாரணையை கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |