சிட்னியில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த கார்: ஒருவர் மரணம்..மூவர் கலவைக்கிடம்
அவுஸ்திரேலியாவில் கார் ஒன்று புறநகர் குடியிருப்புப் பகுதியில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
குடியிருப்புப் பகுதியில் நுழைந்த கார்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்டூவர்ட் சாலையில் SUV கார் ஒன்று, புறநகர் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து மரத்தில் சிக்கிக்கொண்டது.
இதில் பயணியாக இருந்ததாக நம்பப்படும் ஒருவர், வாகனத்தில் இருந்து பாதி வெளியே தூக்கி எறியப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவத்தில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டனர்.
கவலைக்கிடமான நிலையில்
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வெஸ்ட்மீட் மருத்துவமனை மற்றும் வெஸ்ட்மீட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், "பெரியவர்கள் கவலைக்கிடமான ஆனால் சீரான நிலையில் இருக்கின்றனர். சிறுவர்கள் என நம்பப்படும் குழந்தைகள் சீரான நிலையில் இருக்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு மவுண்ட் ட்ரூயிட் அதிகாரிகள், விபத்து விசாரணைப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |