பிரித்தானியாவில் கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவில் கார் மீது ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மீது மோதிய ரயில்
பிரித்தானியாவின் லங்காஷயரின்(Lancashire) ஹோட்டன்(Hoghton) பகுதிக்கு அருகில் உள்ள கிராஸிங்கில் இன்று காலை 8.50 மணியளவில் கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் இருந்த இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் காரில் இருந்த 8 வயது சிறுமி மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக விபத்தில் ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தீவிரம்
இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் ஜேமி மெக்கவான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |