வெனிசுலா நிலநடுக்கம்: 30,000 கடந்த காணாமல் போனவர் எண்ணிக்கை: ஐ.நா எச்சரிக்கை
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் இதுவரை 164 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்
வெனிசுலா நாட்டில் நேற்றிரவு ரிக்டர் 7.1 மற்றும் ரிக்டர் 7.5 அளவிலான சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 164 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 ஆக உயர்ந்து இருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து காணாமல் போனவர்களின் புகைப்படங்களை இணையதளங்களில் பகிர்ந்து உறவினர்கள் அவர்களை கண்டறிய முயற்சித்து வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், கழியும் ஒவ்வொரு மணி நேரமும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு சேதங்கள்
ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா சர்வதேச விமான நிலையம் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது.
மேலும் வெனிசுலாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் பிரேசில் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வெனிசுலாவில் மீட்பு பணிகள் சவாலானதாக இருக்கும் என்றும், அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய கூட்டு முயற்சி தேவைப்படும் என்றும் ஐ.நாவின் அதிகாரி டாம் பிளெட்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் நிலநடுக்கத்திற்கு முன்பே சுமார் 8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்ட நிலையில், தற்போதைய நிலநடுக்கம் நிலைமையை மேலும் மோசம் செய்து இருப்பதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |