அமெரிக்காவிலிருந்து மாயமான நபர் பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு
அமெரிக்காவிலிருந்து மாயமான நபர் ஒருவர் பிரான்சில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து மாயமான நபர்
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்திலுள்ள Covington என்னுமிடத்தைச் சேர்ந்த டாட் கார்லண்ட் (Todd E. Garland, 64) என்பவர், புத்தகக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.

இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, குற்ற வழக்கு ஒன்று தொடர்பில் பொலிசார் மொபைல் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
11ஆம் திகதி அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தப்பியோடிவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், செவ்வாயன்று கார்லண்ட் பாரீஸில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது, கார்லண்ட் உயிரிழந்தது எப்படி, அவர் என்ன குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டார் என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |