பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் புகுந்து விபத்து: 30 வயது நபர் உயிரிழப்பு
car struck Supermarket in Wolverhampton. 30 years’s old man dead: பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் புகுந்த சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கார்
பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்ப்டன் நகரில் உள்ள லிடில் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் கார் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
உடனடியாக மீட்பு பணிகளை அவசரகால படையினர் செய்த போதிலும், காரை ஓட்டி வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

உயிரிழப்பை உறுதிப்படுத்திய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர், இந்த விபத்தில் பலர் காயமடைந்து இருப்பதாகவும் அதில் பலருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மீட்பு படையினரின் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த, பின்ச்பீல்ட் ரோடு வெஸ்ட் மற்றும் பின்ச்பீல்ட் ஹில் ஆகிய இரண்டு சாலைகளும் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
இந்த கார் விபத்தின் காரணமாக சூப்பர் மார்க்கெட்டின் நுழைவு வாயில் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த கார் விபத்தில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.