ஜோர்டான் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 7 பேர் வரை உயிரிழப்பு
Jordan church shooting at least 7 dead: ஜோர்டான் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு
ஜோர்டான் தெற்கே அமைந்துள்ள கார்க் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் தலைநகர் அம்மான் தெற்கே 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழிபாட்டுத் தளத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோர்டான் அரசு பேச்சாளர் மொஹம்மத் அல்-மொமானி X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசு மூலங்களை மட்டும் சார்ந்து இருக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.