ஹொட்டலில் பரவிய விஷவாயு! உயிருக்கு போராடும் 7 பேர்
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள Hampton விடுதியில் Carbon Monoxide விஷவாயு பரவியதன் காரணமாக அங்கிருந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விஷவாயு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடங்குவதாக மீட்புத்துறை அதிகாரி Jay Riley கூறினார்.
இதில் முதலில் 2 வயதான சிறுமி ஒருவர் நினைவிழந்த நிலையில் அங்கேயுள்ள நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
விஷவாயு வால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இருந்ததாகவும் நோயாளிகள் ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
கார்பன் மோனாக்ஸைடினால் விடுதியில் இருந்தவர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த எந்தவொரு விவரமும் இதுவரை தெரியவில்லை.என தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி ஜே ரிலே கூறியுள்ளார்.