முத்தம் தர மறுத்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்! பொலிஸாரிடம் சிக்கியது எப்படி?
முத்தம் கொடுக்க மறுத்த 38 வயது பெண் ஒருவரை அவரது சக ஊழியர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
பிரேசிலில் 38 வயது பெண் சின்டியா ரிபீரோ பார்போசா(Cintia Ribeiro Barbosa) தன்னுடைய சக ஊழியர் ஒருவரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பராமரிப்பாளராக பணியாற்றி வரும் சின்டியா ரிபீரோ பார்போசாவுக்கு திருமணமாகி 8 நாட்களே ஆன நிலையில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, சக ஊழியரான மார்செலோ ஜூனியர் பாஸ்டோஸ் சாண்டோஸ்(Marcelo Junior Bastos Santos) என்பவர் 38 வயது பெண் சின்டியா ரிபீரோ பார்போசாவை முத்தம் கொடுக்க முயன்றதாகவும், இதற்கு சின்டியா மறுப்பு தெரிவித்ததோடு அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மார்செலோ, சின்டியாவை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அத்துடன் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட சொத்து ஒன்றில் அவரது உடலை தூக்கியெறிந்ததாக கூறப்படுகிறது.
சிண்டியாவின் உடல் அவர் கொலை செய்யப்பட்ட ஒரு நாளைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சின்டியா கொலை செய்யப்பட்ட அன்று அண்டை வீட்டாரிடம் இருந்து மார்செலோ மண்வெட்டி கேட்டதை அடுத்து அவர் மீதான சந்தேகத்தை பொலிஸார் முன்வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து சிசிடிவியை சோதித்த பொலிஸார், மார்செலோவின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |