ஹாங்காங்கில் கடலில் விழுந்த சரக்கு விமானம்: விபத்தில் 2 ஊழியர்கள் பலி
சரக்கு விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சரக்கு விமானம் விபத்து
துபாயில் இருந்து ஹாங்காங் நோக்கிய பறந்த சரக்கு விமானம் திங்கட்கிழமை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்களில், AirACT எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த போயிங் 747 ரக சரக்கு விமானம் கடல் நீரில் பாதியளவு மூழ்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
விமானத்தில் பயணித்த 4 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பதை ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக ஓடுபாதையின் தரை வாகனத்தில் இருந்த இரண்டு ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தை தொடர்ந்து விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |