ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் இறங்கிய சரக்கு விமானம்
துபாயில் இருந்து புறப்பட்டு ஹொங்ஹொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
இருவர் மரணம்
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், குறித்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மூடப்பட்டுள்ளதாக ஹொங்ஹொங் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு மற்றும் மத்திய ஓடுபாதைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த விபத்து திங்கட்கிழமை ஹொங்ஹொங் நேரப்படி அதிகாலை 3:50 மணியளவில் நிகழ்ந்தது.
அந்த விமானம் எமிரேட்ஸ் கொடி அடையாளத்துடன் காணப்பட்டதாக விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்களும் மீட்கப்பட்டதாக ஹொங்ஹொங் சர்வதேச விமான நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் விமான நிலைய ஊழியர் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் காணாமல் போனார் என கூறப்படுகிறது. பின்னர் வெளியான தகவலில் விமான நிலைய வாகனத்தில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வெளியான தகவலில், ஹொங்ஹொங்கில் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற விமானம் ஒரு போயிங் 747 சரக்கு விமானம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |