உக்ரைனில் திடீரென வெடித்து கடலுக்குள் மூழ்கிய நேட்டோ உறுப்பினர் நாட்டின் கப்பல்! நீடிக்கும் மர்மம்
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனியாவைச் சேர்ந்த நிறுவனத்தற்கு சொந்தமான சரக்கு கப்பல் வெடித்து சிதறி கடலுக்கு மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிவிபத்தை தொடர்ந்து கப்பல் உக்ரைன் கடற்கரையில் மூழ்கியதை சரக்கு கப்பலின் எஸ்டோனியன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கப்பலில் இருந்த 6 பேரையும் உக்ரேனிய மீட்பு படையினர் மீட்டுள்ளனர். கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பனாமா கொடியிடப்பட்ட கப்பல் எஸ்டோனியாவை தளமாக கொண்ட விஸ்டா ஷிப்பிங் ஏஜென்சிக்கு சொந்தமானது.
பல நாட்களுக்கு முன்பு Odesa-வுக்கு அருகிலுள்ள Chornomorskஎன்ற தெற்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், பின்னர் உக்ரைன் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, ரஷ்ய படைகள் குறித்த சரக்கு கப்பலை கடத்தி பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அதேசமயம், ஐரோப்பிய நாடான எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.