நடுக்கடலில் விபத்துக்குள்ளான கப்பல்கள்: காணாமல் போனவர்கள் மீட்கும் பணி தீவிரம்
ஸ்வீடன் கடற்கரையில் பால்டிக் கடலில் சரக்குக் கப்பல்கள் மோதி பெரும் விபத்துக்கு உள்ளானதில், கப்பலில் இருந்து காணாமல் போன இருவரை தேடும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஸ்வீடனில் உள்ள Ystad நகரத்திற்கும், டென்மார்க் தீவான Bornholm-க்கும் இடையேில் உள்ள பால்டிக் கடலில், இன்று (டிசம்பர் 13) டென்மார்க்கின் Karin Hoej மற்றும் பிரித்தானியாவின் Scot Carrier எனும் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தில், ஸ்வீடனின் Södertälje-ல் இருந்து டென்மார்க்கின் Nykøbing Falster நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டென்மார்க் கப்பல் கடலில் கவிழ்ந்தது.
அந்தக் கப்பலில் இருந்த பணியாளர்கள் காணவில்லை என்றும், அவர்களைத் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்வீடன் ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்தது.
Photo: TT News Agency/Johan Nilsson via REUTERS
2 டேனிஷ் கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஸ்வீடனில் இருந்து 9 கப்பல்கள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக, ஸ்வீடிஷ் கடலோர காவல்படையிலிருந்து ஒரு விமானமும் அனுப்பப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என ஸ்வீடன் கடல்சார் நிர்வாகம் கூறியுள்ள நிலையில், பனிமூட்டமான சூழ்நிலையில் இருந்து வெளிப்படும் மோசமான பார்வை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
Photo: TT News Agency/Johan Nilsson via REUTERS
Photo: Johan Martensson/Swedish Sea Rescue Society/Handout via REUTERS
Photo: TT News Agency/Johan Nilsson via REUTERS