நடுக்கடலில் இருந்து கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: UKMTO விடுத்த அவசர எச்சரிக்கை
சோமாலியா அருகே சரக்கு கப்பலானது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட வணிக கப்பல்
ஞாயிற்றுக்கிழமை யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு(UKMTO) வெளியிட்ட எச்சரிக்கையில், சோமாலியக் கடற்கரைக்கு அருகே வணிக கப்பல் ஒன்று மர்ம நபர்களால் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட கப்பல் அதன் வழக்கமான வழித்தடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு சோமாலிய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் எடுத்து செல்லப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அமைப்பு வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது, வடகிழக்கு சோமாலியாவின் கராகாட் நகரின் வடகிழக்கே சுமார் 6 கடல் மைல் தொலைவில் அரங்கேறியுள்ளது.
கடத்தப்பட்ட கப்பலின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை UKMTO வெளியிடவில்லை.
ஆனால் சம்பந்தப்பட்ட பகுதி கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதி எனவே அப்பகுதி வழியாக செல்லும் கப்பல் அனைத்து மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |