சடலத்தை தபால் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற 2 நபர்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Ireland Post Office Pension Carlow Dead Man
By Ragavan Jan 22, 2022 06:58 PM GMT
Report

அயர்லாந்தில் ஓய்வூதியத்தை பெறும் முயற்சியில், இறந்துபோன முதியவரின் சடலத்தை தபால் நிலையத்திற்கு இரண்டு ஆண்கள் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம், நேற்று, அயர்லாந்தின் கார்லோ நகரத்தில் உள்ள Hosey's தபால் நிலையத்தில் நடந்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி, இரண்டு இளைஞர்கள் ஒரு இறந்தவரின் சடலத்தை முட்டுக்கொடுத்து உயிருடன் இருப்பவர் போல் இழுத்து சென்று, அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்தை வாங்க முயற்சித்துள்ளார்.

ஆனால் தபால் நிலைய ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, விசாரிக்க தொடங்கியபோது, இருவரும் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

சடலத்தை தபால் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற 2 நபர்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Carlow Ireland Dead Man Post Office Pension

இந்த வினோதமான சம்பவம் இப்போது கார்டாய் , ஐரிஷ் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவர் பெயர் Peadar Doyle, வயது 66 என கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் எப்படி உயிரிழந்தார், அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை தொடர்வதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேபோல், சந்தேக நபர்கள் இருவரும் 30 வயதுகளில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

சடலத்தை தபால் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற 2 நபர்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Carlow Ireland Dead Man Post Office Pension

ஐரிஷ் டைம்ஸ் படி, வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஸ்டேபிள்ஸ்டவுன் சாலையில் உள்ள Hosey's கடைக்குச் சென்ற ஒருவர், தன்னால் மற்றொரு நபரின் வாராந்திர ஓய்வூதியத்தைத் பெற முடியுமா என்று கேட்டபொது, இந்த நாடகம் வெளிப்பட்டது.

இறந்தவரின் உடல் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US