232 பந்துகளில் 209 ரன் விளாசிய கேப்டன்! 536 ஓட்டங்கள் குவித்த அணி
கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமோர்கன் அணி முதல் இன்னிங்ஸில் 536 ஓட்டங்கள் குவித்தது.
கார்ல்ஸன் இரட்டை சதம்
தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்து வரும் கவுண்டி டெஸ்ட் போட்டியில், கிளாமோர்கன் மற்றும் ஹம்ப்ஷிரே அணிகள் மோதின.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிளாமோர்கன் அணியில் ஸைன்-உல்-ஹஸன் நிதானமாக ஆடி 143 ஓட்டங்கள் குவித்தார்.
அணித்தலைவர் கிரண் கார்ல்ஸன் (Kiran Carlson) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 232 பந்துகளில் 209 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் அடங்கும்.

சீன் டிக்ஸன் 63 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாச, கிளாமோர்கன் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 536 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
டாம் ப்ரெஸ்ட் 2 விக்கெட்டுகளும், கைல் அப்போட், கோடி யூசுப், சொன்னி பேக்கர், ஃபெலிக்ஸ் ஓர்கன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |