மும்பையை துவம்சம் செய்த CSK: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
மும்பை அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Oops! 😅 Hope Krish Bhagat is okay 👍#TATAIPL Revenge Week 2026 ➡️ #CSKvMI | LIVE NOW 👉https://t.co/wLcMjiCsSi pic.twitter.com/qtJc0iSLcE
— Star Sports (@StarSportsIndia) May 2, 2026
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது.
MI அணியில் அதிகபட்சமாக ரிக்கல்டன் 37 ஓட்டங்களையும், நமன் திர் 57 ஓட்டங்களையும் குவித்தனர்.
சென்னை அணி அபார வெற்றி
160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 11 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Made an impact & how! 👏🌟
— Star Sports (@StarSportsIndia) May 2, 2026
Kartik Sharma makes a mark in the #BiggestRivalry with a maiden #TATAIPL fifty for #CSK! 💛#TATAIPL 2026 | #CSKvMI | [ Ruturaj Gaikwad, Hardik Pandya, Kartik Sharma, Anshul Kamboj, Naman Dhir ] pic.twitter.com/2UJ7qDXhdv
இதையடுத்து உர்வில் படேல் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் 67 ஓட்டங்களும், கார்த்திக் சர்மா 54 ஓட்டங்களும் குவித்து CSK அணியை வெற்றி பெற செய்தனர்.
இதன் மூலம் 18.1 ஓவர்களிலேயே 160 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |