போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ கைது: ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை
மெக்சிகோவில் இருந்து அதிகளவிலான போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடா கைது செய்யப்பட்டார்.
இவர், சினலோவா கார்டெல்லின் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், கோகைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபெண்டானில் போன்ற மிகவும் மோசமான போதைப்பொருள்களை அமெரிக்காவுக்கு கடத்தியதில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டார்.

எல் மாயோ கைது செய்யப்பட்ட போது, தான் மெக்ஸிகோவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவின் டெக்சாஸிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் இறுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் புருக்ளின் கூட்டாட்சி நீதிமன்றம் திங்கட்கிழமை வழங்கிய தீர்ப்பில் இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் அவருக்கு $15 பில்லியன் டொலர் அபராதமும் விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |