சசிகலா மீது வழக்குபதிவு? அதிரடி ஆட்டத்தை துவங்கிய அதிமுக: அமைச்சர் சண்முகம் திட்டவட்டம்
சசிகலா சிறை தண்டனை முடிந்து திரும்பியுள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
பெங்களூருவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, திரும்பும் போது காரில் வந்தார். அந்த கார் ஜெயலலிதா பயன்படுத்திய கார் அதுமட்டுமின்றி, அதில் அவர் அதிமுக கொடியை வைத்த படி வந்தார்.
இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் இல்லாத ஒருவர் எப்படி கொடியை பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகஅமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஓருவாக்கி செயற்க்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
ஆகையால் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும் என்று பதில் அளித்தார்.


