மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
விதிமீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6, தேர்தல் திகதி நெருங்கிய வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசியில் கட்சிகளும், கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளன.
இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் விதிமீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் விருதுநகரில் தேர்தல் விதிகளை மீறி கூடுதலான நேரம் பிரசாரம் செய்ததாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர்கள் உட்பட 450 பேர் மீது அந்நநகர பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
