முதல்வர் குறித்து விமர்சனம்.., உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
Case registered against udhayanidhi stalin- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி மீது வழக்குப்பதிவு
திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்து விமர்சனம் செய்தார்.
சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் பாடல் பாடுவதாகவும், முதலமைச்சர் டான்ஸ், ஃபைட் மட்டும்தான் இன்னும் சட்டமன்றத்தில் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போது சிறுவன் ஒருவனை வேனில் ஏற்றி பேச வைத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவன், ஓம் காளி.. பத்ர காளி எனக் கூறி முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறையை மீறி குழந்தையை பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |