நூற்றுக்கணக்கானோர் மீண்டும் பாதிப்பு... பெருந்தொகை வெகுமதி அறிவித்த சீனா
திடீரென்று நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு இலக்கான நிலையில், வடகிழக்கு சீனாவில் உள்ள நகரம் ஒன்று பெருந்தொகையை வெகுமதியாக அறிவித்துள்ளது.
ரஷ்ய எல்லைக்கு அருகே வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள நகரம் Heihe. இங்கேயே தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் திடீரென்று கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
முதற்கட்ட சோதனையில், இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த திடீர் பாதிப்புக்கு காரணம் தொடர்பில் உறுதியான தகவல் அளிப்போருக்கு 100,000 யுவான் ($15,642) பணம் அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாகாண நிர்வாகம்.
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், திங்கட்கிழமை வரையில் 240 பேர்கள் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் ஆதரவும் இருக்கும் எனவும், இதனால், இந்த விசாரணை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றே நம்புவதாக நகர நிர்வாகமும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் நகர நிர்வாகத்திடம் தெரிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவின் Henan, Beijing, Gansu மற்றும் Hebei ஆகிய பகுதிகளில் புதிதாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நகர நிர்வாகங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.