ஈரான் போர்: பிரித்தானிய பயணிகளுக்கு சில முக்கிய அறிவிப்புகள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக பிரித்தானியாவிலிருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் நிலவுவதால், அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவேண்டாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விமானங்கள் பல ரத்து

Cathay Pacific விமான நிறுவனம், ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை, துபாய் மற்றும் ரியாத் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Cathay Pacific Airways: All flights to Dubai and Riyadh, including cargo, canceled up to April 30
— First Squawk (@FirstSquawk) March 18, 2026
அத்துடன், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், பஹ்ரைன், டெல் அவிவ் மற்றும் அம்மான் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் மே மாதம் 31ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
துபாய் செல்லும் விமானங்கள் ஜூன் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தோஹா செல்லும் விமானங்கள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும், அபுதாபி செல்லும் விமானங்கள் அக்டோபர் வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Hi, our Contact Centre is currently experiencing a high volume of calls, leading to increased wait times.
— Emirates Support (@EmiratesSupport) March 18, 2026
Please DM us your booking details so that we can review and guide you further. We’ll do our best to respond within 48-72 hours. Thank you.
இதற்கிடையில், டிக்கெட் தொகையை திரும்பப் பெறுவது மற்றும் மாற்று விமானம் குறித்து விசாரிப்பது ஆகிய விடயங்களுக்காக எமிரேட்ஸ் விமான நிறுவனத்தை தொடர்புகொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், மக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |