ஒரு நகரம் மொத்தம் துர்வாடையால் முகம் சுளிக்க வைத்த கப்பல்: விரிவான பின்னணி
தென்னாப்பிரிக்க தலைநகரில் மக்களை மொத்தமாக முகம் சுளிக்க வைத்த கப்பலானது இறுதியில் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப் டவுன் துறைமுகம்
பிரேசில் நாட்டில் இருந்து 19,000 பசு மாடுகளுடன் புறப்பட்ட Al Kuwait என்ற கப்பலானது ஞாயிறன்று கேப் டவுன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் பசு மாடுகளுக்கான தீவனங்களை ஏற்றும் வகையிலேயே கேப் டவுன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
@reuters
ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனையடுத்து NSPCA அமைப்பானது தொடர்புடைய கப்பலை ஆய்வுக்கு உட்படுத்தியது.
மாடுகள் கொல்லப்படும் நிலை
இதில் மலம் மற்றும் சிறுநீரின் தீவிர பாதிப்பு உட்பட, வெறுக்கத்தக்க நிலைமையில் கப்பல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த கப்பலில் பசு மாடுகள் ஏற்றப்பட்டு 2 வாரங்களுக்கு மேலானதாகவும், வேறு வழியின்றி, அதன் கழிவுகளின் மீதே ஓய்வெடுக்கும் நிலைக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
@reuters
மேலும் காயங்கள் காரணமாக 8 மாடுகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சில மாடுகள் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |