கறி சுவையை மிஞ்சும் வகையில் காலிஃபிளவர் கிரேவி: எப்படி செய்வது?
காலிஃபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இந்த சுவையான காலிஃபிளவர் கிரேவி தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
கறி சுவையை மிஞ்சும் வகையில் சுவையான காலிஃபிளவர் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 4 ஸ்பூன்
- காலிஃபிளவர் - 200g
- வெங்காயம்- 2
- உப்பு- தேவையான அளவு
- முந்திரி- 5
- தக்காளி- 2
- நெய்- 1 ஸ்பூன்
- கிராம்பு- 3
- பட்டை- 2
- பிரியாணி இலை- 1
- ஏலக்காய்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- பிரியாணி மசாலா- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி எடுத்து வைத்த காலிஃபிளவர் சேர்த்து பிரட்டி எடுத்துகொள்ளளவும்.
அடுத்து அதே வாணலில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிபின் முந்திரி, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வெந்து வந்ததும் இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் நெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்து மசாலா சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
இதனைத்தொடர்ந்து அதில் காலிஃபிளவர் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொத்தித்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் காலிஃபிளவர் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |