விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு காரணம் இதுவாக இருக்கலாம்: மருத்துவர் கூறிய தகவல்
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப் 19ம் தேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீராவின் இறப்பு
விஜய் ஆண்டனியின் மகள் மீரா(வயது 16) சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.
இவர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது தந்தை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின் ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலர் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
மருத்துவர் கூறிய தகவல்
பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நேர்காணலில் கலந்து கொண்ட போது, விஜய் ஆண்டனியின் மகளின் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் பலருக்கு வீடுகளில் தனியாக அறை கொடுக்கப்படுவதாகவும் இதனால் அவர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவதற்காக வாய்ப்பு கிடைப்பதே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், அவர்களுக்கு என்ன நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இது அவர்களை மன அழுத்தத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தனி அறையில் விடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மகள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |