அந்த 1 மணி நேரம் எங்கே இருந்தீங்க? போன் ரெக்கார்ட் ஆதாரம்; சிக்கலில் விஜய்
கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையில், விஜய்யின் இருப்பிடம் குறித்து முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 ஆம் கட்ட சிபிஐ விசாரணையில் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 200க்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 12 ஆம் திகதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், 2 ஆம் கட்ட விசாரணைக்காக நேற்று மீண்டும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்த விசாரணையில், கரூருக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்?, வாகனத்தின் மேல் இருந்த உங்களுக்கு நெரிசல் ஏற்பட்டது தெரியவில்லையா?, அசம்பாவிதம் ஏற்பட்டதும் அங்கிருந்து உடனே கிளம்பியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ கேட்டுள்ளது.
சாலையில் ஏராளமான வளைவுகள் இருந்ததால் தாமதமாக சென்றதாக விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒரு மணி நேரம் எங்கே இருந்திங்க?
மேலும், உங்கள் வாகனம் ஒரு மணி நேரத்திற்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளதை உங்கள் போன் சேட்டிலைட் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் நீங்கள் போன் பேசியதற்கான ரெகார்டிங் உள்ளது. வாகனம் எங்கு? ஏன் நிறுத்தப்பட்டது என கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விகளுக்கு விஜய் சரியான பதில்களை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாட்சியாக இருந்த விஜய், அவரது பதில்களின் மூலம் சந்தேகத்திற்குரிய நபராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
பிப்ரவரியில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில் விஜய் பெயரையும் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |