குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்? அடுக்கான கேள்விகளை கேட்கும் சிபிஐ
கரூர் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் விஜய்யின் பெயரை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 ஆம் கட்ட சிபிஐ விசாரணையில் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கட்சி நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்காக நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதன்படி, கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

சுமார் 7 மணி நேர விசாரணையில் 100க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
நேற்றே தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய் இன்று மீண்டும் 2 ஆம் கட்ட விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இன்றும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இதில், "கூட்ட நெரிசல் தொடர்பாக காவல்துறை பொது அறிவிப்பு கொடுத்து வந்துள்ள வீடியோக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் உங்களுடைய வாகனம் கூட்டத்தில் தொடர்ந்து முன்னேறி செல்வதையும் காட்சிகளில் யார்க்க முடிகிறது.
கூட்ட நெரிசலைத் தடுக்க, வாகனத்தை நிறுத்தியிருக்கலாம். தொடர்ந்து கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்துள்ளீர்கள்" என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்?
காவல்துறையின் அறிவுறுத்தலின் படியே வாகனத்தை இயக்கியதாகவும், காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கரூர் பிரச்சாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றுள்ளீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, சாலையில் ஏராளமான வளைவுகள் இருந்ததால் தாமதமாக சென்றதாக விஜய் பதிலளித்தாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
மேலும், நீங்கள் குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும் போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா?, கூட்ட நெரிசலை எப்போது உணர்ந்தீர்கள் என அடுக்கக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
பிப்ரவரியில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில் விஜய் பெயரையும் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யிடம் விசாரணை நீடிக்க உள்ளதாகவும், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |