லண்டனில் ரயில்வே ஊழியரிடம் அத்துமீறி தவறாக நடந்த பெண்! புகைப்படம் வெளியிட்ட பொலிசார்
லண்டன் ரயிலில் ஊழியரிடம் பெண்ணொருவர் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான தகவலை பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் வெளியிட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்
அதன்படி கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி இரவு 8 மணியளவில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மீது பெண்ணொருவர் பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
BTP/newcivilengineer
விசாரணைக்கு உதவி
அந்த அறிக்கையில், இந்த பெண்ணை உங்களுக்கு அடையாளம் தெரியுமா? லண்டன் செல்லும் ரயிலில் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த சிசிடிவி படத்தை வெளியிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் உள்ள பெண் விசாரணைக்கு உதவியாக இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.