மொபைல் பார்த்துக்கொண்டிருந்த நபர்... ஆற்றுக்குள் இறங்கிய குழந்தை: துயர முடிவு
தன் பேரன் ஆற்றுக்குள் இறங்குவதைக் கவனிக்காமல் மொபைலில் மூழ்கியிருந்தார் ஒரு முதியவர். விளைவு? குழந்தையை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.
ஆற்றுக்குள் இறங்கிய குழந்தை
Image: Supplied
சீனாவில், புதன்கிழமையன்று, தங்கள் வீட்டு முன் ஓடும் ஆற்றில் தனது பொம்மையைக் கழுவச் செல்லலாமா என தன் தாத்தாவிடம் மீண்டும் மீண்டும் கேட்டுள்ளான் மூன்று வயதான அவரது பேரன்.
அவரோ, மொபைலில் சமூக ஊடகத்தில் மூழ்கியிருந்ததால், குழந்தை சொன்னதை கவனிக்கவில்லை.
Image: Supplied
குழந்தை பொம்மையைக் கழுவ ஆற்றின் அருகில் செல்ல, ஆற்றுக்குள் தவறி விழுந்திருக்கிறான். அப்போதும் அந்த முதியவர் பிள்ளையைக் கவனிக்காமல் மொபைலில் மூழ்கியிருந்திருக்கிறார்.பின்னர் குழந்தை சடலமாகத்தான் மீட்கப்பட்டிருக்கிறான்.
இந்தக் காட்சிகள் அந்த பகுதியிலிருந்த CCTV கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளன. என் குழந்தையின் கடைசி வீடியோ அதுதான் என கண்ணீர் வடிக்கிறார் குழந்தையின் தாய்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |