காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்! 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி
காசாவில் 3 நாள் போர் நிறுத்தத்தில் 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம்
காசாவில் உள்ள 6,40,000 பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் முகாம்களை ஞாயிற்றுக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டமைப்புகள் இணைந்து நடத்தவுள்ளனர்.
பயங்கரமான போர் நாட்டின் சுகாதார கட்டமைப்புகளை சீரழித்துள்ள நிலையில் இந்த போலியோ தடுப்பு முகாமானது முன்னெடுக்கப்படுகிறது.
போலியோ பாதிப்பு
இந்த மருத்துவ முகாமானது காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு போலியோ பதிவானதை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
போலியோ-வால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரண்டு கால்களும் முடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைச்சகத்தின் தகவலில், சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள முடக்குவாதமானது, இன்னும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு எந்த அறிகுறியும் வெளியே தெரியாமல் இருந்து வருவதை சுட்டிக் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் UN சந்திக்கும் சவால்கள்
ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ள இந்த போலியோ தடுப்பூசி முகாமானது அவ்வளவு எளிதாக இருக்க போவதில்லை.
காசாவின் பெரும்பாலான சாலைகள், மருத்துவமனைகள் கட்டமைப்புகள் மிகவும் சேதமடைந்துள்ளது.
அதே சமயம் காசாவில் உள்ள 90 சதவீத மக்கள் போர் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிதறிக் காணப்படுகின்றன.
உலக சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலுடன் போலியோ தடுப்பு மருந்து செலுத்துவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
3 நாட்கள் நடைபெறும் போலியோ மருத்துவ முகாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நேரமான காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கூடுதலாக ஒரு நாள் போலியோ முகாம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |