ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல கோடீஸ்வரர் பலி!
அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் செக் குடியரசின் கோடீஸ்வரர் பெட்ர் கெல்னர் பலியானார் என்று அவரது முதலீட்டுக்கு குழுவான PPF உறுதிப்படுத்தியது.
முன்னதாக, Anchorage, நகரின் கிழக்கே பனிப்பாறை அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோடீஸ்வரர் கெல்னரைத் தவிர, மற்றொரு செக் குடிமகன், இரண்டு வழிகாட்டிகள் மற்றும் விமானி என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
heli-skiing என்று அழைக்கப்படுவதற்கு புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது, ஹெலிகாப்டர் பனிச்சறுக்கு வீரர்களை மலையின் உச்சியில் கொண்டு செல்லும் போது விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெல்னரின் இறுதி சடங்கு ஒரு குறுகிய குடும்ப வட்டாரத்திற்குள் நடைபெறும் என்று PPF செய்தித் தொடர்பாளர் Itka Tkadletsova செய்தியாளர்களிடம் கூறினார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, கெல்னரின் நிகர மதிப்பு 17.5 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது சொந்த முதலீட்டுக் குழுவிலிருந்தும், தொலைத் தொடர்பு நிறுவனமான O2 செக் குடியரசு, PPF வங்கி மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் பங்குகளிலிருந்தும் கோடீஸ்வரர் கெல்னர் தனது செல்வத்தை ஈட்டியுள்ளார்.
