உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? இதை மட்டும் செய்து விடாதீர்கள்
செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் எல்லோரும் பதறிவிடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் உடனே விரைந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிக டெக்னாலஜி வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஸ்மார்ட்போன்களில் தண்ணீர் மற்றும் தூசி மூலமாக ப்ரொடெக்சன் போன்றவை வருகிறது.
பொதுவாக செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்?
உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.
குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும்.
எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.