தேனீக்களுக்கே வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் சிமெண்ட் தேன்: கவலையை ஏற்படுத்தியுள்ள தகவல்
தேனீக்களுக்கே வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் சிமெண்ட் தேன் என்னும் ஒரு தேனைக்குறித்த கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சிமெண்ட் தேன்
சுவிட்சர்லாந்தில் தேன் உற்பத்தி செய்யும் பலர் ஒரு வித்தியாசமான பிரச்சினையால் நஷ்டத்துக்குள்ளாகிவருகிறார்கள்.
அதற்குக் காரணம், சிமெண்ட் தேன். இந்த சிமெண்ட் தேன் என்பது என்பதன் பின்னணியில் பேன் போன்ற ஒரு பூச்சி உள்ளது.
அதாவது, இந்த பூச்சிகள் உருவாக்கும் ஒருவகை சர்க்கரை, அதிவேகமாக உறைந்து கல்போலாகிவிடும் குணம் கொண்டதாக காணப்படுகிறது.
இந்த சர்க்கரையை தங்கள் கூட்டுக்குக் கொண்டுவந்து தேனை உருவாக்குகின்றன தேனீக்கள்.
தேன் உற்பத்தியாளர்கள் தேன் சேகரிக்கும்போது, தேன்கூடு நிறைய தேன் இருப்பது போலிருக்கிறது.
ஆனால், தேனை எடுத்தால் தேன் வரவில்லை, அது, கட்டியாகிவிட்டிருக்கிறது. இதுதான் சிமெண்ட் தேன் எனப்படுகிறது.
தேனீக்களுக்கே வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தேன்
விடயம் என்னவென்றால், இந்த கட்டியான தேனால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், தேனீக்களுக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் தேனீக்கள் தேனை தங்கள் உணவாக உட்கொள்கின்றன. ஆனால், இந்த சிமெண்ட் தேனை கரைக்க தேனீக்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.
அவற்றை ஜீரணிப்பதும் தேனீக்களுக்கு கடினமாக உள்ளதால், தேனீக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தேனீக்கள் பாதிக்கப்பட்டால் அவற்றின் மொத்த காலனியும் அழிந்துபோகும் அபாயம் ஏற்படுகிறது.
ஆனால், இந்த சிமெண்ட் தேனை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிலர், அது நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அது நல்ல வாசனையாக இருப்பதாகவும், நெய் போல மணல் மணலாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
விடய என்னவென்றால், சிமெண்ட் தேனையும் விற்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், அதை தேன் கூட்டிலிருந்து பிரித்தெடுப்பது கடினமாக உள்ளதாம். சூடாக்கிதான் தேனை பிரிக்கவேண்டியுள்ளதாம்.
ஆனால், தேனை சற்று அதிகம் சூடாக்கிவிட்டால் தேனும், தேன் கூட்டிலுள்ள தே மெழுகும் மொத்தமாக உருகி எல்லாமே நாசமாகிவிடும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் தேன் உற்பத்தியாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |