பிரித்தானியாவிலேயே அதிக ஊதியம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்
பிரித்தானியாவிலேயே அதிக ஊதியம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர், இப்போதுதான் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஆவார்.
அதிக ஊதியம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றியதற்காக ஒரு சராசரி நாடாளுமன்ற உறுப்பினரின் ஊதியத்தை விட அதிக வருவாய் ஈட்டியுள்ளார்.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் பிரதமர் ரிஷிக்கு திகிலை ஏற்படுத்திய Nigel Farage ஆவார். GB News சேனலில் செய்தி வழங்குபவராக பணியாற்றியதற்காக, Nigel மாதம் ஒன்றிற்கு 97,900 பவுண்டுகள் பவுண்டுகள் ஊதியம் பெற்றார்.
பிரித்தானியாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆண்டு ஊதியமே சுமார் 91,346 பவுண்டுகள்தான்.
The Reform UK கட்சியின் தலைவரான Nigel, கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி, ஏற்கனவே தோல்வி பயத்தில் இருந்த முன்னாள் பிரதமர் ரிஷிக்கு திகிலை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
பிரித்தானிய பிரதமரின் ஆண்டு ஊதியம் 172,153 பவுண்டுகள் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்காக 91,346 பவுண்டுகள், பிரதமராக பணியாற்றுவதற்காக 80,807 பவுண்டுகள் என மொத்தம் பிரதமர் ஆண்டுக்கு 172,153 பவுண்டுகள் ஊதியம் பெற முடியும்.
ஆனால், அந்தத் தொகையில் 75,440 பவுண்டுகள் மட்டுமே அவர் கோரியுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |