கோர தாண்டவமாடிய சுனாமி: 13 ஆண்டுகளாக அயராமல் மனைவியின் உடலை தேடி வரும் நபர்
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவானது. அந்த சுனாமியின்போது 15,000 பேர் உயிரிழந்தார்கள், 360 பில்லியன் டொலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
மணிக்கு 700 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த அலைகள், ஜப்பானுக்குள் 10 கிலோமீற்றர் நிலப்பரப்பை வரை வந்தெட்டின.
பெண்ணொருவர் அனுப்பிய கடைசி செய்தி
அந்த சுனாமியின்போது, தன் மனைவியான Yuko Takamatsu (47), ஒரு மலையின்மீது அமைந்திருந்த வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததால் அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது என உறுதியாக நம்பிக்கொண்டிருந்தார் Yasuo Takamatsu (64).
’நீங்கள் ஓகேவா, எனக்கு வீட்டுக்குச் செல்ல ஆசையாக இருக்கிறது’ என்று தனது கணவரான Yasuoக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் Yuko. அதுதான் அவர் தன் கணவருக்கு கடைசியாக அனுப்பிய செய்தி.
இதற்கிடையில், Yukoவும் அவருடன் வேலை செய்துகொண்டிருந்த அலுவலர்களும் சுனாமியிலிருந்து தப்புவதற்காக 30 அடி உயரத்திலிருந்த தங்கள் அலுவலகத்தின் மாடிக்குச் சென்றார்கள். 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும் என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்க, அலைகள் 60 அடிக்கும் மேல் எழும்ப, Yukoவும் மற்றவர்களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
அலைகள் ஓய்ந்தபின், மறுநாள்தான் இந்த செய்தி Yasuoவுக்கு தெரியவந்துள்ளது.
அப்போது Yasuo வாழ்ந்த Onagawa பகுதியிலுள்ள 10,000 பேரில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தார்கள். அவர்களில் 569 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. கிடைக்காத 2523 பேரின் உடல்களில் Yasuoவின் மனைவி Yukoவின் உடலும் ஒன்று.
மனைவியின் உடலை அயராது தேடிவரும் கணவர்
அப்போதிருந்து, இன்று வரை தன் மனைவியாகிய Yukoவை இன்னமும் ஆழ்கடலுக்குள் நீந்திச் சென்று தேடி வருகிறார் Yasuo.
அவர் அப்படி தேடும்போது, காணாமல் போன பலரது உடல்களும் உடைமைகளும் கிடைத்துள்ளன.ஆனால், Yukoவின் உடலோ, அவர் வைத்திருந்த பொருட்களோ கிடைக்கவில்லை.
இருந்தாலும், எனது உடலில் உயிர் இருக்கும் வரை அவளைத் தேடுவேன் என்கிறார் Yasuo.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |