ஈரான் துறைமுகங்கள் சுற்றி வளைத்த CENTCOM: திருப்பி அனுப்பப்பட்ட 31 சரக்கு கப்பல்கள்
ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முழுமையான கடல் வழி முற்றுகையை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பான சென்ட்காம்(CENTCOM) அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரானுக்கு செல்லும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் CENTCOM முடக்கியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஈரான் நோக்கிச் சென்ற மற்றும் அங்கிருந்து புறப்பட்ட 31 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மறிக்கப்பட்ட மற்றும் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பல்கள் பெரும்பாலும் தொழில்துறை எண்ணெய் விநியோகக் கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முழுமையான முற்றுகைக்கு அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய இராணுவ பலத்தை பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்கா ராணுவத்தின் இந்த முற்றுகை தடையை முறியடிக்க முடியாத படி, தரை, கடல் மற்றும் வான் என அனைத்து வழிகளிலும் கண்காணிப்புகள் திவீரப்படுத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 17 போர் கப்பல்கள், 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த முற்றுகையை ஒருங்கிணைத்து முன்னெடுக்க கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |