மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை அதிகரிக்க திட்டம் - உலக தங்க கவுன்சில் ஆய்வு
உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 45 சதவீத மத்திய வங்கிகள் தங்களது தங்க கையிருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இது இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
ஆய்வில், 89 சதவீத கையிருப்பு மேலாளர்கள் உலகளவில் தங்க கையிருப்புகள் அடுத்த 12 மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும், 84 சதவீதம் பேர் தங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் உலக கையிருப்புகளில் அதிக பங்கை வகிக்கும் எனவும், 74 சதவீதம் பேர் அமெரிக்க டொலரின் பங்கு குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய வங்கிகள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கம் வாங்கியுள்ளன. இது முந்தைய தசாப்தத்தை விட இரட்டிப்பு அளவு ஆகும்.
ஆய்வில், 90 சதவீதம் பேர் தங்கம் நெருக்கடி காலங்களில் சிறப்பாக செயல்படுகிறது என்பதையே முக்கிய காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். 84 சதவீதம் பேர் தங்கத்தை நீண்டகால மதிப்பு சேமிப்பு மற்றும் பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு எனக் கருதுகின்றனர்.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
இந்த ஆய்வில், இதுவரை பங்கேற்றதிலேயே அதிகபட்சமாக 76 மத்திய வங்கிகள் பங்கேற்றன. புதிய நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா, குவாத்தமாலா, எல் சால்வடார் போன்றவை தங்க சந்தையில் மீண்டும் நுழைந்துள்ளன.
இதனால், தங்கம் உலகளாவிய நிதி அமைப்பில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதையும், மத்திய வங்கிகள் தங்கத்தை மூலோபாய நிதி சொத்து (Strategic Monetary Asset) எனக் கருதத் தொடங்கியுள்ளன என்பதையும் இந்த ஆய்வு கூறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |