ஊழியர்களுக்காக 50,000 லொட்டரி சீட்டுக்களை வாங்கிக் குவித்த சி.இ.ஓ.! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் பிரபல உணவகத்தில் சி.இ.ஓ. பரிசு விழுந்தால் தனது ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காகவே 50,000 லொட்டரி சீட்டுக்களை வாங்கி குவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Raising Cane's Chicken Fingers எனும் உணவகத்தில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Todd Graves 830 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத்தொகைக்கான Mega Millions லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார்.
அமெரிக்கா, குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்த உணவக நிறுவனத்தில் 50,000 ஊழியர்கள் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Mega Millions-ன் 830 மில்லியன் (இலங்கை ரூ. 29,500 கோடிகள்) ஜாக்பாட்டுக்கான லொட்டரியைப் பற்றி அறிந்த Todd Graves தனது ஊழிர்கள் 50,000 பேரின் சார்பாகவும், பரிசை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் 50,000 மெகா மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். இந்த ஜாக்பாட்டை அவர் வென்றால், பரிசுத்தொகையை தனது அனைத்து ஊழியர்களுடனும் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஜாக்பாட்டை வென்றால், வரி மற்றும் விலக்குகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய 480 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூ. 17,058 கோடிகள்) பரிசுத் தொகை நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பணியாளருக்கும் பிரிக்கப்படும்.
அதன்படி ஒவ்வொரு பணியாளரும் சுமார் 9,600 டொலர் பெறுவார்கள். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 34 லட்சமாகும்.
Buying 50,000 lottery tickets is harder than you think! ? Hoping to share the winning jackpot with our 50,000 @RaisingCanes Crew. pic.twitter.com/hLlajBJwlH
— Todd Graves (@ToddGraves) July 25, 2022
50,000 சீட்டுகளை வாங்குவதற்காக ரைசிங் கேன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டோட் கிரேவ்ஸ் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஜே. குமரன் ஆகியோர் திங்களன்று வெவ்வேறு எரிவாயு நிலையங்களுக்குச் சென்றனர்.
கிரேவ்ஸும் குமரனும் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பணம் நிரம்பிய ஒரு பையுடன் தனிப்பட்ட முறையில் டிக்கெட்டுகளை வாங்கினார்கள்.
கிரேவ்ஸ் மற்றும் குமரன் ஒரு டிக்கெட்டுக்கு $2 விற்கும் லாட்டரி சீட்டுகளுக்காக $100,000 (இலங்கை ரூ. 3.55 கோடி) செலவழித்தனர்.