நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை
Google நிறுவனத்தில் தனது 20 வருடங்களை நிறைவு செய்துள்ள CEO சுந்தர் பிச்சை, உணர்ச்சிகரமாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சை Google நிறுவனத்தில் இணைந்து 20 ஆண்டுகள் ஆகிறது.
இந்த சந்தர்ப்பத்தில், கூகுள் உடனான தனது உறவு குறித்து உணர்ச்சிகரமான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் 2004-இல் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகச் சேர்ந்ததிலிருந்து இன்று வரை, அவர் கூகுளில் இருப்பதை நினைவில் வைத்து இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்த முதல் நாட்களில் இருந்து இன்று வரை நிறுவனத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
'கூகுளில் எனது முதல் நாள் ஏப்ரல் 26, 2004 அன்று தொடங்கியது. நான் ஒரு தயாரிப்பு மேலாளராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
அதன் பிறகு, அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பம், எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என நிறைய மாறிவிட்டன. என் தலைமுடியும் கூட மாறிவிட்டது.
ஆனால், இந்த மாபெரும் அமைப்பில் பணிபுரியும் உற்சாகம் மாறவில்லை. 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதில் ஒரு அங்கமாக இருப்பதை நான் இன்னும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்” என்று சுந்தர் பிச்சை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அந்த அமைப்பில் இருந்து பெற்ற நினைவுப்பரிசுகளைஅவர் பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த சுந்தர் பிச்சை 2004ல் கூகுளில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் ஒரு சாதாரண ஊழியராக நுழைந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்தார். படிப்படியாக வளர்ந்து, CEO பதவியை ஏற்றார்.
Google Chrome, Android, Google Drive என அனைத்து சிறந்த கண்டுபிடிப்புகளும் இவரின் சிந்தனையில் இருந்து பிறந்தவை. 2015ல் அந்த கடின உழைப்புக்கு பரிசாக CEO பதவி கிடைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google CEO Sundar Pichai, Indian Origin Google CEO, CEO of Alphabet Sundar Pichai, Sundar Pichai Completes 20 Years In Google, feeling lucky