கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் நாட்டின் ஜனாதிபதி மரணம்! இராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான Chad-ன் ஜனாதிபதி Idriss Deby இறந்துவிட்டார் என இராணுவ செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் காயமடைந்த நாட்டின் ஜனாதிபதி Idriss Deby உயிரிழந்துள்ளார்.
68 வயதான Idriss Deby, வார இறுதியில் போர்க்களத்தில் தனது கடைசி இறையாண்மையை சுவாசித்தார் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் Azem Bermandoa Agouna அரசு தொலைக்காட்சியில் வாயிலாக தெரிவித்தார்.
வடக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் முன் களத்தில் மோதலில் ஈடுபட்டு வரும் இராணுவ படைகளை பார்வையிடும்போது துப்பாக்கிச சூட்டில் காயமடைந்த சாட்டின் ஜனாதிபதி Idriss Deby மரணமடைந்தார்.
மறைந்த Chad ஜனாதிபதியின் மகன் ஜெனரல் Mahamat Kaka இடைக்கால அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Deby ஆறாவது முறையாக சாட்டின் ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறுநாளே அவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Deby தனது ஆதரவாளர்களுக்கான வெற்றி உரையை ஒத்திவைத்துவிட்டு அதற்கு பதிலாக Chad இராணுவ வீரர்களை பார்க்க சென்றார் என்று அவரது பிரச்சார மேலாளர் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
லிபியாவுடனான வடக்கு எல்லையை தளமாக கொண்டு செயல்படும் The rebel group Front for Change and Concord in Chad (FACT) குழு, தேர்தல் நாளில் ஒரு எல்லை சோதனை சாவடியை தாக்கி பின்னர் தெற்கே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் முன்னேறியது.
ஆனால் அது வார இறுதியில் ஒரு பின்னடைவை சந்தித்தது என Chad இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.