முதல் போட்டியிலேயே அரைசதம் மற்றும் 3 விக்கெட்! பிக்பாஷில் விருதை தட்டித்தூக்கிய இலங்கை கேப்டன்
மகளிர் பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்கு எதிரான போட்டியில், இலங்கையின் சமரி அதப்பத்து சிறந்த வீராங்கனை விருதை கைப்பற்றினார்.
பிக்பாஷ் லீக்
சிட்னியில் நேற்று நடந்த மகளிர் பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சிட்னி தண்டர் அணி சமரி அதப்பத்து (52), போஎபே (54) ஆகியோரின் அரைசதத்தினால் 190 ஓட்டங்கள் குவித்தது.
சிட்னி தண்டர் வெற்றி
பின்னர் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி சமரி அதப்பத்து, ஹீதர் நைட் ஆகியோர் மிரட்டலான பந்துவீச்சினால் 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
சமரி அதப்பத்து மற்றும் ஹீதர் நைட் தலா 3 விக்கெட்டுகளும், சம்மி ஜோ ஜோன்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Sydney Thunder Nation
இந்த சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே சமரி அதப்பத்து அரைசதம் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.
Twitter (@ESPNcricinfo)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |