உலகக்கோப்பையில் யாரும் நெருங்க முடியாத சாதனை படைத்த கில்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் மிரட்டலான சாதனை படைத்தார்.
தரம்சாலாவில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
AP
இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்தது. விராட் கோலி 95 ஓட்டங்களில் அவுட் ஆகி சாதனை சதத்தை தவறவிட்டார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் சுப் கில் 26 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அவரது சாதனையை கில் 38 இன்னிங்ஸ்களில் முறியடித்தார்.
ANI
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:
- சுப்மன் கில் (38 இன்னிங்ஸ்)
- ஆம்லா (40 இன்னிங்ஸ்)
- ஜஹீர் அப்பாஸ் (45 இன்னிங்ஸ்)
- கெவின் பீட்டர்சன் (45 இன்னிங்ஸ்)
- பாபர் அசாம் (45 இன்னிங்ஸ்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |