ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதலிடம்! இலங்கை வீராங்கனை சாதனை
மகளிர் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சமரி அதப்பத்து தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் தொடர் வெற்றி
மகளிர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
Abhishek Chinnappa/Getty Images
இதன்மூலம் அவர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம்பிடித்து (758 புள்ளிகள்), ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
ஆடவர் கிரிக்கெட்டில் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக முதலிடம் பிடித்து மிரட்டியுள்ளார் சமரி அதப்பத்து.
தொடரின் சிறந்த வீராங்கனை
சமரி அதப்பத்து முதல் போட்டியில் 83 பந்துகளில் 108 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மேலும் தொடரின் சிறந்த வீராங்கனை விருதையும் அவர் வென்றார்.
மூன்று போட்டிகளில் 2 சதங்கள் அடித்ததன் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா), மெக் லானிங் (அவுஸ்திரேலியா), லாரா வால்வார்ட் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரை முந்திய சமரி அதப்பத்து, முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை பின்னுக்குத் தள்ளினார்.