சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு.!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், இந்திய அணி வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும், இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயில் நடத்த BCCI விருப்பம் தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் திகதி முதல் மார்ச் 9-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இத்தொடரின் போட்டிகளை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு 16 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
இந்திய அணி 2007-08 முதல் பாகிஸ்தானில் விளையாடவில்லை. 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அரசு மறுத்துவிட்டது.
அதன் பின்னர் இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் விளையாடி வருகின்றன. 2013 முதல், இரு அணிகளும் 13 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் நடுநிலை மைதானங்களில் விளையாடியுள்ளன.
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது.
இந்திய அணி கடைசியாக 2008-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டு போட்டிகள் டிரா ஆனது.
பாகிஸ்தான் கடைசியாக 2012-13ல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர் நடைபெற்றது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 1-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்
சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் இடம் மற்றும் அட்டவணையின் வரைவை பிசிபி ஐ.சி.சி.யிடம் சமர்ப்பித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் அவுஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, பிப்ரவரி 20-ஆம் திகதி வங்கதேசத்தையும், பிப்ரவரி 23-ஆம் திகதி பாகிஸ்தானையும், மார்ச் 2-ஆம் திகதி நியூசிலாந்தையும் இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் லாகூரில் நடைபெற வாய்ப்புள்ளது.
ஆசிய கோப்பை: இலங்கையில் நடைபெற்றன இந்தியாவின் போட்டிகள்
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்தியது. அப்போதும் இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுத்தது.
இதையடுத்து, 'ஹைப்ரிட் மாடலில்' போட்டிகள் நடைபெற்றன. இந்தியப் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றன. கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BCCI Formally Informs PCB, Indian Team Will not Travel To Pakistan For Champions Trophy, India pakistan, Champions Trophy 2025