தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருவதால் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதனால், வெள்ளம் வடியத் தொடங்கிய பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை
இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |