வங்கக்கடல் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
"தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வெப்பம் குறைவாக இருக்கும்” என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |