ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு! ஜப்பான் பிரதமர் பேட்டி
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.
உலகில் அணு ஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு வருகை தந்த ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் Rahm Emanuel-ஐ வரவேற்ற போது Fumio Kishida இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஹிரோஷிமாவுக்கு வருகை தந்த Rahm Emanuel உடன் நகரின் அமைதி நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு Fumio Kishida சென்றார்.
பின் பேட்டியளித்த Fumio Kishida, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஹிரோஷிமாவுக்கான Rahm Emanuel-ன் வருகை மற்றும் அணு ஆயுதத்தின் விளைவு குறித்து அவர் பார்த்த அனுபவம், சர்வதேச சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தியாக இருக்கும் என நாம் நம்புகிறேன் என கூறினார்.
உக்ரைனில் ஒரு நகரமே சிதைந்து கிடக்கும் பயங்கரம்... நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
எங்கள் வருகை அர்த்தமுள்ளதாக இருந்தது என்று நான் நம்புகிறேன்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதில் உள்ள சிரமங்களைக் காட்டுகிறது என ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.